கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா!

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இன்று (04) அறிவித்தார்.

மிஸ்ரா, இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், அந்தப் போட்டியில் ஐந்து ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிஸ்ரா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி (5/71) தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

42 வயதான இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடினார்.

மேலும் அந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடிய மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக மிஸ்ராவும் கருதப்படுகிறார்.

42 வயதான இவர் 162 போட்டிகளில் 174 விக்கெட்டுகளுடன் போட்டியின் வரலாற்றில் எட்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஹெட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அவர் வைத்திருக்கிறார்.

சிறப்புச் செய்திகள்