இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் முதல் விமர்சனம்!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வித்யுத் ஜாம்வால், ருக்மிணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவரவிருக்கும் மதராஸி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்திலிருந்து டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மதராஸி படத்தை விநியோகஸ்தர் ஒருவர் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில் “Madharaasi — triple blast; ARM x Anirudh x Sivakarthikeyan na” என தனது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் படம் வேற லெவலில் உருவாகியுள்ளது என்றும் கண்டிப்பாக முருகதாஸுக்கு இது மாஸ் காம்பேக் ஆக அமையும் என்றும் தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்