நான் ஹீரோ ஆனால் அந்த படம் ஹிட்டானது அவரால் தான் – நாகார்ஜுனா

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவர் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கூலி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாகார்ஜுனா அவரது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் நடித்த படங்களில், ‘ஆக்கரி போராட்டம்’ ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவலை நாகர்ஜுனா பகிர்ந்துள்ளார்.

அதில், ” ஆக்கரி போராட்டம் படம் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் ராகவேந்திர ராவ் மற்றும் கதாநாயகி ஸ்ரீதேவி ஆகியோர் தான் காரணம். அதில் ஹீரோவாக நடித்த நான் பொம்மை போல இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்