வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் பதின்மூன்றாம் நாள் இன்றாகும்.
பதின்மூன்றாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (10) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வருவார்.
ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி அலங்காரக் கந்தனின் சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும், 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
Post Views: 185





