செம்மணி விவகாரம் ஒரு பேசுபொருளாக உள்ள நிலையில் இந்த விடயத்தில் ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்களா என்ற கேள்வி சில சந்தர்பங்களில் எழுகின்றது.
செம்மணி விவகாரத்தில் நீதி தேடுகின்ற படிமுறை ஒரு மாற்றுப்பரிமாணத்தை பெற வேண்டிய தேவை இருப்பதாக இது விடயம் தொடர்பில் ஆராய்வாளர்கள் கருதுகின்றனர்.
கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதி தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கையறு நிலையும் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் காலம் கடத்தும் செயற்பாடுகள் தொடர்பிலும் நிதானித்து இராஜதந்திர நகர்வுகளை நகர்த்த வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த விசாரணைகளுக்காக பழைய மற்றும் புதிய வழக்குகள் இணைக்கப்படுமாக இருந்தால் விசாரணைகளுக்காக இளஞ்செழியன் போன்ற ஒரு நீதிபதியின் தேவையும் உணரப்பட்டுள்ளது.
Post Views: 186