கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமரின் அறிவிப்பு!

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் செயற்படும் தமிழ் அமைப்பு ஒன்றுக்கு எழுத்திய கடிதம் ஒன்றில் இந்த விடயத்தை பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் கனடா ஆதரிக்கிறது. அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அளித்து வரும் பங்களிப்புகளை எங்கள் அரசாங்கம் மதிக்கிறது.

அமைச்சரவையில் பதவி வகித்த இரண்டாவது இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சராக அவரது மரபு குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்.

வெளிநாட்டினரின் வெறுப்பை எதிர்க்கிறோம். அந்த வகையில், வணிக மற்றும் சமூகத் தலைவர்களாக இருந்து, எங்கள் சமூகத்தின் துடிப்பை மேம்படுத்துவது வரை கனடா வாழ் ஈழத்தமிழர்கள் நாட்டிற்கு செய்யும் மகத்தான பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்