நாடு வீழ்ச்சியடைந்ததற்கு நாமும் பொறுப்பு சொல்ல வேண்டும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு தாமும் பொறுப்பு சொல்ல வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போராட்டம் நடத்தியதன் விளைவுகளை தற்பொழுது பார்க்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொழில் வாய்ப்பு வழங்கும் ஓர் நிறுவனமாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு தாம் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட நெல் விதை வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குமாறு கோரி நாம் நடத்திய போராட்டங்கள் காரணமாக பிரதேச செயலங்களில் பட்டதாரிகள் நிரம்பியுள்ளதாகவும் அவர்களுக்கு செய்வதற்கு வேலையொன்றும் இல்லை எனவும் லால்காந்த தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்