இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது , ஈரானில் எதிரொலிக்கும் வெடி முழக்கம்!

இஸ்ரேல், ஈரானின் மீது “முன்கூட்டிய தாக்குதல்களை” (Preemptive Strikes) மேற்கொண்டுள்ளதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ அறிவித்துள்ளார்.

இத்தாக்குதல்களுக்கு பின்னர் இஸ்ரேலில் அவசர நிலை (State of Emergency) பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு , ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதில்தாக்குதல் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் IRNA என்ற அரசாங்க ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் தெஹரானில் தொடர்ந்து வெடிப்பு ஒலிகள் கேட்டதாகவும், நிலைமை கவலையை உருவாக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா எந்தவித உதவியையும் வழங்கவில்லை என்றும், இதில் எந்த நேரடி ஈடுபாடும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபி, சமூக வலைத்தளமான X-இல் (முன்னாள் Twitter) “எங்களைப் பாதுகாக்க இருவரும் (இஸ்ரேலும் ஈரானும்) வேண்டுகிறேன். எமது தூதரகம் சத்தமின்றி சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்கிறது. எப்போதும் ஜெருசலேமின் நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்று பதிவு செய்துள்ளார்.

இஸ்ரேலின் ராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல்கள், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்களை குறிவைத்தவையாகும்.

இது “முன்கூட்டிய, துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை” என்றும், ஈரானில் பல்வேறு பகுதிகளில் உள்ள “டஜன் கணக்கான முக்கிய இடங்கள்” தாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சிறப்புச் செய்திகள்