இந்தியாஅகமதாபாத் விபத்துக்கு முன் விமானி மேற்கொண்ட Mayday call!

இந்தியாவில் இன்று வெடித்து சிதறிய விமானத்தின் விமானி அகமதாபாத்திலுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளார்.

மேடே (Mayday call) அழைப்பு என்பது விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் சூழல்களில் ஏதேனும் ஆபத்து ஏற்படவுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால பேரிடர் சமிக்ஞையாகும்.

ஒரு விமானியால் இந்த மேடே அழைப்பு மேற்கொள்ளப்படுவதாவது, விமானம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்பதைக் குறிக்கும்.

மேடே அழைப்பு
இந்நிலையில், இன்று அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் இந்த மேடே அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அழைப்புகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை என இந்திய விமானக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட குறித்த விமானம், விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி மேடே அழைப்பு மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பான MAYDAY CALL சென்றுள்ளது.

அபாய தகவல்

பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்ததாகவும், ஆனால் விமானியின் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், விமானத்தின் எரிபொருள் தாங்கி முழுவதும் எரிபொருள் இருந்ததால்தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த விமானி, 8,200 மணிநேரம் விமானத்தினை இயக்கியுள்ள அனுபவமுள்ளவர் எனவும் அவருடன் துணை விமானியாக இருந்த கிளைவ் குந்தர் என்பவருக்கு 1100 மணி நேரம் விமானத்தினை இயக்கிய அனுபவம் இருப்பதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்