இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், மக்களுடைய காணிகள் பறிக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் அவலங்களும் நடைபெறுகின்றன.
வன வள திணைக்களமும் துறைமுக அதிகார சபையும் தொடர்ச்சியாக மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்பு நிலங்களையும் அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் மற்றும் முத்துநகர் போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் காணிகளை சோலார் திட்டத்திற்காக இந்தியாவின் தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் செயற்பாட்டையும் அரசாங்கம் மேற்கொள்கின்றது.
Post Views: 135