ஜெயலலிதாவின் நிலையில் மாவை சீ.வி.கே அதிர்ச்சித் தகவல்!

மாவை விழுந்த உடன் ஆள் கோமாவுக்கு சென்று நேற்று மதியம் அளவில் ஆள் முடிந்து விட்டது என தனக்கு நெருக்கமான வைத்திய நிபுணர் தெரிவித்ததாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.விகே.சிவஞானம் மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார் என யாழ்ப்பாண புலனாய்வுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சசிகலா வைத்து அம்மா இட்லி சாப்பிட்டார், வீடியோவில் பார்த்தார் என உலகத்தை ஏற்மாற்றியது போல மாவையின் மகன் கலையமுதன் நடத்தும் நாடகமே இப்போது வைத்திய சாலையில் இடம் பெறுகிறது.

மாவையின் கதை நேற்று முடிந்து விட்டது நான் சென்ற போதே அதை நன்கு அறிந்து கொண்டேன் ஓரிரு தினங்களில் கண்ணை விழித்த மாவை கட்சியில் யாருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டாம், அதுவே அப்பாவின் இறுதி ஆசை என தன்னிடம் கூறியதாக கலையமுதன் ஊடகங்களுக்கு தெரிவிப்பார் அதற்காகவே இந்த திருவிளையாடல்.

அது மட்டுமல்ல நான் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் சாணக்கியன் போன்றோரின் பெயரை கெடுப்பதற்கு அந்த குடும்பம் செய்யும் கசபோக்கிலித்தன சாவீட்டு கடைசி அரசியல்.

மாவை உயிருடன் இருந்த போதும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிழிக்கவில்லை, இனி எதை மகன் கிழிக்கிறார் என்று பார்ப்போம் மாவை உயிருடன் இருந்திருந்தால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்களால் பார்த்திருப்பார். இப்போது அவர் மேலே இருந்து பார்க்கட்டும் தமிழரசுக் கட்சியின் அதிரடி நடவடிக்கைகளை.
மாவையை நம்பி கட்சி இல்லை இனி என்ன நடக்கிறது என்பதை மட்டும் ஊடகங்கள் பார்க்கட்டும் என மேலும் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண புலனாய்வுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

செய்தி அனுப்பியவரின் நலன் கருதி பெயரை பிரசுரிப்பதை தவிர்த்துள்ளோம்

சிறப்புச் செய்திகள்