அரிசியின் விலை 500 ரூபாவை தாண்டும்!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.

முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு தொன் யூரியாவின் விலை 1282 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த விலையில் யூரியாவைக் கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி விலை 500 ரூபாவைத் தாண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இன்று இலங்கையில் 25 கிலோ யூரியா மூடை ஒன்று 9000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்