அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

NPP தேசிய மக்கள் சக்தி சார்பில்
அப்புத்தளை தொகுதியில் பதுளை மாவட்டத்திற்கான வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Ambika Samuel
நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Selvi Selvi

கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது.

மாற்றம் என்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல….
சமூகங்களிலும் ஏற்படும் மாற்றமும் மிக முக்கியம்…!!
பதுளை அம்பிகா சாமுவேல் சொல்கிறார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வருகிறேன். எங்களின் பிரச்சினைகளை அறியாத ஒருவரே இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து எழுந்து நின்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான வாழ்வை கட்டியெழுப்பக் கூடிய மக்கள் பிரதிநிதியாக இப்போதுதான் வருகிறேன். உரிமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, அரசியல், சுகாதாரம், சமூக அங்கீகாரம், இது என் நாடு என்ற உணர்வைப் பெறுவதே எனது நோக்கம்.

மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் இருவருக்கும். இது நல்லதொரு ஆரம்பம்..!!

சிறப்புச் செய்திகள்