நீங்கள் 8,17,26 எண்ணில் பிறந்தவர்களா?

8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!

இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த ஈ.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.

முன் கோபக்காரராக இருப்பர் . மூளைத்திறன் கொண்ட இவர்கள் முன் கோபத்தை விட்டு விட்டால் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியையும் , வெற்றியும் அடைவீர்கள் .
எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாது .

இந்த எண்ணினர் நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர். எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.

உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது. அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி.

எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.

8ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்காதீர்கள். சுயமாக சிந்தித்து முன்னேறும் வலிமை உங்களிடம் உள்ளது.

சிறப்புச் செய்திகள்