யாழில் சண்டித்தனம் காட்டிய பொலிஸுக்கு வக்காளத்து வாங்கிய அதிகாரி!

தொல்புரம் மத்தியில், வாளுடன் பிறரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பொலிஸ் அலுவலர், வாள்வெட்டுக்காக வந்தவர்களிடம் வாளைப்பறித்து அவர்களை விரட்டினார் என்று காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தின்போது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் வாளால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ‘பொலிஸ் அலுவலர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?’ என்று இதன்போது கேள்வி எழுப்பப்பட்ட நிலையிலேயே, அந்தப் பொலிஸ் அலுவலர், வாள்வெட்டில் ஈடுபடவில்லை என்றும், வாள்வெட்டுக்காக வந்தவர்களிடம் வாளைப் பறித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார் எனவும் காங்கேசன்துறை பொலிஸ்ப் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

பொலிஸ் அலுவலகர் குடிபோதையில் வந்ததும், வாளோடு அட்டகாசம் புரிந்ததும் காணொலியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களிலும் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்