அமெரிக்கத் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடியதோடு, இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதற்கான கருத்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அமெரிக்க தூதுவர் – சஜித் பிரேமதாச இடையே முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங் (Julie Chung) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் திங்கட்கிழமை (07-03-2022) இடம்பெற்றது.

மேலும் இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தூதுவர் – சஜித் பிரேமதாச இடையே முக்கிய சந்திப்பு! 5 மாதங்கள் முன்

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் மதிப்பை வலியுறுத்தினார்.

குறிப்பாக இலங்கையுடன் நிலவும் சமூக பொருளாதார கலாசார உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்திய தூதுவர் அதனை மேலும் வலுப்படுத்த அவசியமான காரணிகளை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்