இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

சீனாவும், இந்தியாவும் இணைந்தால் ஆசிய சகாப்தம் நடக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் சுலலொங்கொன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ‘இந்து – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நோக்கு’ என்ற தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்திய பின்னர், எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லையில் பீஜிங்கின் செயற்பாட்டுக்குப் பின்னர், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு ‘மிகவும் கடினமான கட்டத்தை’ கடந்து வருவதாகவும், இரு அண்டை நாடுகளும் கைகோர்க்க முடியாவிட்டால் ஆசிய சகாப்தம் நடக்காது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவும், இந்தியாவும் இணைந்தால் ஆசிய சகாப்தம் நடக்கும். ஆனால் இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைய முடியாவிட்டால் அது நடப்பது கடினமாகும் என்றும் இந்தியாவும், சீனாவும் இணைய வேண்டுமானால், அதற்கு இலங்கை மட்டும் அவசியமில்லை என்றும், செயற்பட வேண்டிய பல காரணங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும், சீனாவும் கைகோர்ப்பது சொந்த நலனுக்கானது என்றும், சீன தரப்பில் ஞானம் உயதமாகும் என்றும் தாங்கள் மிகவும் நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவ இந்தியா தம்மால் இயன்றதைச் செய்துள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம், கடன் எல்லை வசதிகள் மற்றும் பரிமாற்ற ஏற்பாடுகள் அடங்களாக, 3.8 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில், இலங்கைக்கு இந்தியா எந்த உதவியையும் செய்ய முடியும். அதைத் தாங்கள் இயல்பாகவே செய்வதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்