புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

சில அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

எவ்வாறாயினும், தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

பயங்கரவாதம் அல்லது வேறு காரணங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருந்த 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

அதற்உலகத் தமிழ் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ் (ATC), ஈழ மக்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் மீதான தடை பாதுகாப்பு அமைச்சினால் நீக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறையின் 4 (7) ஆவது ஒழுங்கின்கீழ், இந்த தடை நீக்கம் செய்யப்படடுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்பிரவரி 25 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் 15 அமைப்புக்கள் மற்றும் 316 தனிநபர்களுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இற்றைப்படுத்தப்பட்ட தடைப்பட்டியல்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்