இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் ஏதிலிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
குறித்த நால்வரும், தலைமன்னாரில் இருந்து இன்று அதிகாலை படகு மூலமாக இராமேஸ்வரத்தை சென்றடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரே தமிழகம் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, மண்டபம் கரையோர காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த நால்வரும் 2006 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மண்டபம் முகாமில் தங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் 4 பேரும் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 97





