புலம்பெயர் பணியாளர்களின் பணவனுப்பல் 50 சதவீதத்தினால் வீழ்ச்சி!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் 50% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் மொத்தமாக 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

எனினும், இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே அனுப்பியுள்ளனர்.

மத்திய வங்கியின் தகவலுக்கமைய, வெளிநாட்டு பணியாளர்கள் இவ்வருடத்தின் ஜூலையில் 297.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜூனில் 274 மில்லியன் அமெரிக்க டொலரையும், அதற்கு முந்தைய மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலரையும் அனுப்பியுள்ளனர்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்