18,800 லீட்டர் டீசலுடன் நால்வர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட 18 ஆயிரத்து 800 லீட்டர் டீசலுடன் 4 பேரை ஹம்பாந்தோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (10) அதிகாலை 2 மணியளவில் ஹம்பாந்தோட்டை ஸ்ரீபோபுர பகுதிகளில் இதுதொடர்பான முற்றுகை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்பு ஏற்றி செல்ல பயன்படும் பாரிய லொறி ஒன்றும், மீனை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட 2 லொறிகளை பயன்படுத்தி நீரை நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் தாங்கிகளில் இந்த டீசல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்பாந்தோட்டை தலைமை பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்