பல நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை வர தடை!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளிலிருந்துவரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தென்னாபிரிக்கா, பொத்ஸ்வானா, லெசோதோ, நமீபியா, சிம்பாப்வே மற்றும் எஸ்வடினி முதலான நாடுகளிலிருந்து இருந்து வரும் பயணிகளுக்கு, இன்று(27) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் இருப்பார்களாயின், உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்