இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் பயன்பாடு தொடர்பில், மத்திய வங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவித்தலை விடுத்துள்ளது.
மெய்நிகர் நாணயங்கள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் பெருமளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத எண்மான ரீதியான பெறுமதியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலத்திரனியல் ரீதியாக வர்த்தகப்படுத்தப்படக் கூடியவையாகும்.
க்றிப்டோ கரன்ஸிஸ் (Cryptocurrencies) என்ற மறைகுறிநாணயங்கள் உட்பட மெய்நிகர் நாணயங்களை ஈடுபடுத்துகின்ற திட்டங்களை தொழிற்படுத்துவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது கம்பனிக்கோ ஏதேனும் உரிமத்தை அல்லது அதிகாரத்தை இலங்கை மத்திய வங்கி வழங்கவில்லை.
அத்துடன் ஏதேனும் ஆரம்ப குற்றி வழங்கல், வார்த்தல் தொழிற்பாடுகள் அல்லது மெய்நிகர் நாணய பரிமாற்றல்கள் என்பவற்றுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
மேலும், பற்று அட்டைகள் மற்றும் கடன் அட்டைகள் போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள், மெய்நிகர் நாணயக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆகவே, மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிதியியல் சாதனங்களாக கருத்திற்கொள்ளப்படுவதுடன், இலங்கையில் அவற்றின் பயன்பாடு தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்வையையும் பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை.
ஆகையால், மெய்நிகர் நாணயங்களின் முதலீடுகள் மூலம் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்படக்கூடிய கணிசமான நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் அதேபோன்று வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இணையதளம் அதேபோன்று வேறு ஊடக வடிவங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான மெய்நிகர் நாணய திட்டங்களுக்கு இரையாக வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





