லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை மேலும் விஸ்தரித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் ஒருமில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கொழும்புக்கு தேவையான எரிபொருளை கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர் டபிள்யு சொய்ஷாவினால் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு மேலதிக தாங்கி ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனோஜ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 184





