ஏற்றுமதி நடவடிக்கைகள் கடந்த மே மாதத்தில் 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
தைக்கப்பட்ட ஆடைகள், புடவை வகைகள், தெங்கு பொருள்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, தேயிலை, வாசனை திரவியங்கள், இறப்பர் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், கடல் உணவுகள் போன்றவற்றின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வகையில் மே மாதத்தில் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இந்த வருட ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 145





