விசேட அதிரடிப்படையின் அரந்தலாவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதிப் பத்திரமின்றி எரிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (29) கிராந்துருகோட்டையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது 1,900 லீற்றர் டீசல் மற்றும் 19 லீற்றர் பெற்றோலை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த எரிபொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 900,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவராவார்.
சந்தேகநபர் கிராந்துருகோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





