பேலியகொட சந்தையில் பழங்களின் இனிமையான நறுமணத்திற்கு பதிலாக அருவருப்பான துர்நாற்றம் வீசுகிறது, ஏனெனில் சந்தை வளாகத்தில் தொன் கணக்கில் கழிவுகள் குவிந்துள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முக்கியமாக குப்பையில் இருந்து உருவாகும் தாங்க முடியாத துர்நாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைவடைந்துள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவிகின்றனர் .
குப்பைகளை அகற்றுவதில் ஏற்றப்பட்டுள்ள தாமதம் இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது
இங்கு தினமும் சுமார் 10-20 தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன . எனினும் எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் குப்பைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இச்சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக UDA இன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரத்னவீர தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் அவ்வப்போது குப்பைகளை அகற்றினால் மட்டுமே இங்கு தொடந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





