அரிசி விலையை தீர்மானிப்பதில் சிக்கல்!

பாரிய அளவான அரிசி ஆலை உரிமையாளரினால் நாட்டில் அரிசி விலையை தீர்மானிப்பது நகைப்புக்குரிய விடயம் என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் நாயகம் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியதொரு அரிசி மாப்பியா தொடர்பான விபரம் வெளிப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், பிரதான அரிசி ஆலை உரிமையாளரான டட்லி சிறிசேன, அரிசியை விற்பனை செய்யும் விலைகள் தொடர்பில் அரிசி உரிமை உரிமையாளர்களிடம் யோசனைகளை முன்வைத்திருந்தார்.

ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நாடு 220 ரூபாவுக்கும் சம்பா 230 ரூபாவுக்கும் கீரி சம்பா 260 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யுமாறு டட்லி சிறிசேன அறிவித்திருந்தார்.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தை நகைப்புக்குரியதாகவே கருதவேண்டியுள்ளது

குறித்த விடயத்தில், அரசாங்கம் பொறுப்புக்கூறலுடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாயின், அரசியை 110 ரூபாவுக்கு மக்களுக்கு வழங்க முடியும் என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் நாயகம் கே.பி. குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்