டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டொக்டர். பிரசாத் கொலபாகே,
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், 31,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர் , ஆனால் கடந்த ஆறு மாதங்களில், 25,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த தொகையில் 40% ஆகும். “கொழும்பு மாவட்டம் அதிக ஆபத்தில் உள்ளது என்பது இரகசியமல்ல” என்று டாக்டர் கொலபாகே கூறியுள்ளார் .
டெங்கு நோயாளர்களின் அதிகரிப்புடன், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது, மேலும் நாட்டில் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு ஆகியவற்றுடன் இந்த ஆபத்து தீவிரமடைந்து வருகிறது. எனவே, இந்த அபாயம் குறித்து மக்கள் மற்றும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் , இல்லையெனில், கடுமையான விளைவுகள் ஏற்படும்.
இந்த மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கும் சாத்தியமே உள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளில் டெங்கு பரவல் தொடர்பில் நாம் கவனம் செலுத்தத் தவறியுள்ளோம்.
ஆனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. மக்கள் தங்கள் சொந்த தோட்டங்களையும், சுற்றியுள்ள சூழலையும் சுத்தம் செய்ய அன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





