இலங்கையில் கடந்த 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன் முறையாக உணவுப் பொருட்களின் விலை அதிக அளவில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய இலங்கையின் உத்தியோகபூர்வ உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2021 மே மாதம் முதல் இந்த வருடம் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் அதிகபட்சமாக 71 சதவீத அதிகரிப்பையும் கடந்த மாதத்தில் 13 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக உணவின் சில்லறை விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கும் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு மே மாதம் உணவிற்காக குடும்பம் ஒன்று வாராந்தம் ஆயிரத்து 140 ரூபாவினை செலவிட்டிருந்தது.
ஆனால், தற்போது குறித்த தொனை ஆயிரத்து 940 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





