நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்கும் வகையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
இது தொடர்பில் தொழிற்சங்கங்கள், தனியார் துறை முதலாளிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தொழில் ஆணையாளர் நாயகமான பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் போது, தொழிற்சங்கங்கள் ரூ. 5,000 கொடுப்பனவு அவர்களுக்குப் போதுமானதாக இல்லை எனவும், அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் உரிமையாளர்கள் இந்த நேரத்தில் அதனை வழங்க முடியாது எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய , இந்த அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய அறிக்கை இறுதித் தீர்மானத்துக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com