50 வீத பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 50% தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ்கள் மேலும் தடம் புரளும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா முடக்கலின் போது பேருந்துகளை இயக்குவதை நிறுத்தியதால் வேலை இழப்பை ஈடுசெய்ய அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 250 தனியார் பஸ்கள் தமது தினசரி பயணத்தை இரத்து செய்துள்ளதாக மாகாணங் களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில பேருந்துகள் தமது இலக்குகளை அடைய முடியாமல் எரிபொருள் தீர்ந்து போன சந்தர்ப்பங்கள் இருப்பதாக அதன் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையால் பேருந்துகளின் இயக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களும், பேருந்து உரிமை யாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்