4 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்!

இவ்வருடத்தில் இதுவரையாக காலப்பகுதியினுள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 121,795 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன், இவ்வருடம் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்