37.6 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள், வெளியான பகீர் தகவல்!

2030ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம், பேரிடர் தாக்கங்களினால் உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் உள்ள நாடுகள் வருடத்துக்கு 560 பேரிடர்களை சந்திக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 13ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை கடைபிடிக்கிறது.

ஒற்றுமையின் மூலமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்றமுடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருள் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்