3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு

அடுத்த சில வாரங்களில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்ச எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்து தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்திக் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெரும்பாலான எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், நகர்ப்புற விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

அத்துடன் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் மேலும் பல வழங்குநர்களை தெரிவு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்