350 நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை!

350 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, இந்த மாதத்திற்கு வழங்க வேண்டிய எரிபொருளை வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லையென தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வீதிகளை இடைமறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் காரணமாக, எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் சாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த களஞ்சியத் தொகுதியில், எதிர்வரும் சில நாட்களுக்கு அவசியான எரிபொருள் உள்ள நிலையில், அதனை சிக்கலின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதன்மூலம், எதிர்வரும் 3 நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை வீழ்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு வேளையிலும், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்