நாள்தோறும் 3 மணிநேரம் மின்வெட்டு

இன்று (16) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 3 மணித்தியாலம் மின் துண்டிப்பு அமுலாகிறது.

மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய Aமுதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களில் இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர் பகுதிகளில் காலை 6 மணிமுதல் 8.30 வரையான இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பு அமுலாகும்.

இதேவேளை, MNOXYZ வலயங்களில் அதிகாலை 5.30 முதல் 8.30 வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்