22 இலட்சம் தேசிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை திட்டம்

முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் பசுமையான தேசம்’தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் மன்னார் மாவட்டத்திலும் நேற்று (29) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய நீலாசேனை கிராமத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.

கிராமத்தில் உள்ள வீடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்தோட்டச் செய்கையையும் அதிகாரிகள் பார்வையிட்டதோடு, குறித்த செய்கையை ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடிd

நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், உற்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல்

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய, ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை – 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல் என்ற திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்றைய தினம் (29) யாழ் நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் இடம்பெற்றன.

கொவிட் பெருந்தொற்று எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்திய நிலையிலும், இந்த நெருக்கடியிலிருந்து உருவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும், பசுமை சமூகப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கையை மாற்றுவதற்கான ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத்திட்டத்திற்கமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யத்தக்க உணவுப் பயிர்களைக் பெற்று இறக்குமதிக்கான மாற்றீடுகளின் உள்ளூர் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு முதலிடம் வழங்கப்பட்டு, தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைப் புரட்சியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி ஆர்வமூட்டி, நேரடியாக பங்கேற்க நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளைச் சுற்றி சுத்தமான சூழல் காணப்படும் நிலையில், நாளாந்த நுகர்வுக்கு தேவைப்படும் நச்சுத்தன்மையற்ற புதிய மரக்கறிகள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள், பழங்கள், பால், முட்டை போன்ற போசனை மிக்க உணவுகளை வீடுகளிலேயே பரஸ்பர குடும்ப அங்கத்தவர்களின் உதவிகளினூடாக பெற்று உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியமுள்ள தன்னிறைவு பெற்ற குடும்ப அலகுகளாலான மக்கள் தொகையை உருவாக்குவதே இந்த ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சமுர்த்தி நாற்று மேடைகளினால் உருவாக்கப்பட்ட மரக்கறிச் செடிகள் ( ஒரு வீட்டிற்கு 40 செடிகள் என்ற வகையில்) அந்த பிரிவின் பயனாளிகளுக்கு இயலுமான அளவு பகிர்ந்தளிப்பதற்கும், வீட்டுத் தோட்டம் தொடர்பாக ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற உள்ளீடுகள் ( தென்னங்கன்று, மருத்துவ மூலிகைச் செடிகள், பழக்கன்றுகள், சிறு ஏற்றுமதி செடிகள்) கிடைக்கின்ற ஒழுங்குமுறைகளுக்கமைய பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ,தும்பாலை பகுதியில் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது.

தேசிய கொடியேற்றியதனையடுத்து பயன்தரு மரங்கள் ,அதிதிகளினால் நடப்படதன் பின்னர் வீட்டுத்தோட்ட பயிர்களும் நடப்பட்டன. அதனையடுத்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்