ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
21 விமானங்களுக்காக நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது, அது தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது.
அத்துடன், குத்தகைக் காலம் நிறைவடைந்து வரும் விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏ330-200 அல்லது ஏ330-300 ரகங்களைச் சார்ந்த 10 எயார்பஸ்கள் மற்றும் ஏ320 அல்லது ஏ321 ரகங்களைச் சார்ந்த 11 எயார்பஸ்களை 6 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தற்போது பயன்பாட்டில் அல்லாத மாற்று பயணிகள் விமானங்களையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பரிசீலிக்கவுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து புதிய இடங்களுக்கு சேவையை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் எதிர்பார்க்கிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





