2021 இல் தேயிலை உற்பத்தி 7.35 சதவீதத்தால் அதிகரிப்பு

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கடந்த வருடம் தேயிலை தொழிற்துறை உயர்வடைந்துள்ளதாக அதன் தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளின் வருமானம் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டைக்காட்டிலும், கடந்த வருடம் 7.35 சதவீதத்தால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன்படி, 299.34 மில்லியன் கிலோகிராம் தேயிலை கடந்த வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த வருடத்தில் 286.2 மில்லியன் கிலோகிராம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதோடு, அது 2020ஆம் ஆண்டை காட்டிலும் 20.4 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பை காட்டியுள்ளது.

இதேவேளை, ஏற்றுமதியின் ஊடாக கடந்த வருடத்தில் 263.35 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

காலநிலை மற்றும் இரசாயன உரம் இன்மையினால் தேயிலை தொழிற்துறை பல சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த உயர்வினை காட்டியுள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்