இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் வருகை

17,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில்,

இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 17,000 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு பிரிட்டன், இந்தியா, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

நாளந்தம் 1,600 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

மே மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 650 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்