11.7 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்

தேசத்தின் காப்புறுதியாளரான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் 2021ஆம் ஆண்டுக்கு வரிக்கு முந்தைய இலாபமாக 11.7 பில்லியன் தொகையினையும் காப்புறுதி தவணை தொகையாக 43.2 பில்லியனைக் கொண்டு 9.7மூ அபரிதமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

நாட்டிலுள்ள சவால்கள் நிறைந்த பொருளாதார நிலையிலும், 268 பில்லியன் பெறுமதியான சொத்து மதிப்பீட்டினையும், 152 பில்லியன் பெறுமதியான ஆயுள் காப்புறுதி தொகையினையும் கொண்டு நாட்டின் விசாலமான மற்றும் பலமான காப்புறுதி நிறுவனமாக தமது இடத்தை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் மீண்டும் தனதாக்கியுள்ளது.

தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார தாக்கத்தால் ஏனைய காப்புறுதி நிறுவனங்களைப் போன்றே தரப்படுத்தலில் ~watch negative” என்று அடையாளமிடப்பட்டதோடு நீண்டகால நிதி ஸ்திரதன்மைக்காக AA (Ika) பிட்ச் தரப்படுத்தலை அவ்வாறே பேணுவதற்கு ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸால் இயன்றது.

மேலும் AA(Ika) பிட்ச் தரப்படுத்தலை வென்ற ஒரேயொரு இலங்கை காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்ஆகும்.

ப்ரேண்ட் பினான்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் பெறுமதி மிக்க சாதாரண காப்புறுதி நாமம் மற்றும் மக்களது நன்மதிப்பை வென்ற காப்புறுதி நாமம் எனும் விருதுகளை தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் தனதாக்கியுள்ளது.

2021ஆம் ஆண்டினுள் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸின்ஆயுள் காப்புறுதி தவணைத் தொகை 19.3 பில்லியன் ரூபா தொடக்கம் 21.9 பில்லியன் ரூபா வரையில் உயர்வடைந்துள்ளதோடு அதன் வளர்ச்சி 14.1 ஆகும்.

2021ஆம் ஆண்டு அதிகூடிய போனஸ் தொகையாக 8.6 பில்லியன் ரூபாவை தமது வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுத்த இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி நிறுவனமாக முன்னணியில் திகழ்வதோடு கடந்த 15 வருட காலமாக சுமார் 73.2 பில்லியன் ரூபாவை போனஸ் தொகையாக தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

சாதாரண காப்புறுதி தொகுதியில் தமது காப்புறுதி தவணையாக 21.2 பில்லியன் ரூபா வரையில் உயர்வடைந்துள்ளதோடு அதன் வளர்ச்சி 5.4 வீதம் ஆகும்.

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் பல்வேறு விதமான காப்புறுதித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதோடு வாடிக்கையாளர்களுக்கு செலுத்தக்கூடிய அளவிலான காப்புறுதி வசதிகளைப் பெற்றுக்கொடுத்து 190 வாடிக்கையாளர் சேவை நிலையங்களையும் சுமார் 8000 காப்புறுதி ஆலோசகர்களையும் கொண்டு சிறந்த சேவை வலையமைப்பை வழங்கி வருகின்றது.

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் புதிய உத்திகளை கையாள்வதில் முன்னணி வகிப்பதோடு அதன் முதற்கட்டமாக டிஜிட்டல் தளத்தை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது.

மோட்டார் வாகன காப்புறுதி செலுத்துவதற்கான புதிய அமைப்பையும் கடதாசி பாவனையற்ற டிஜிட்டல் செயன்முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் தலைவர் பொறியியலாளர் விஜித்த ஹேரத் குறிப்பிடுகையில்,

‘ சவால்கள் நிறைந்த காலகட்டத்திலும் சிறந்த காப்புறுதி சேவைகளை எமது நிறுவனம் வழங்கி வந்ததோடு 60 வருட கால பெருமையுடன் எமது சேவைகளை விஸ்தரிப்பதற்கும் வேகமாக்குவதற்கும் நாங்கள் என்றும் செயற்படுவதோடு தேசத்தின் காப்புறுதியாளர் எனும் எமது நாமத்தை தொடர்ந்தும் சிறந்த முறையில் பேணிட நாம் முயற்சி செய்வோம்.

மேலும் மக்களது நம்பிக்கையை வென்றுள்ள அதேவேளை அவர்களது காப்புறுதி தேவைகளை சிறந்த முறையில் நிவர்த்தி செய்வோம்” எனக்குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸின் பிரதான நிறைவேற்று அதிகாரி சந்தன எல்.அழுத்கம குறிப்பிட்டதாவது, ‘

போட்டிகரமான சூழலின் கீழ் விரைந்து மாறிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு மத்தியில் இவ்வாறானதொரு நன்மதிப்பையும் வருவாயையும் அடைந்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.

தற்பொழுது அனைத்தும் டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கும் வேளை நாமும் எமது சேவைகளை மேம்படுத்தியுள்ளதோடு எதிர்வரும் காலங்களில் மாற்றங்களுடனான சிறந்த காப்புறுதி சேவைகளை பெற்றுக்கொடுக்க காத்திருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்