இந்த வார இறுதிக்குள் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், இந்த வார இறுதி வரை தொடரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முத்துராஜவெல முனையத்தில் சுமார் 20,000 தொன் டீசல் சரக்கு இறக்கப்பட்ட போதிலும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கே அது போதுமானதாக இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, இம்மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் வரவிருந்த நான்கு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது சுமார் 7000 தொன் டீசல் உற்பத்தித் திறன் கொண்டுள்ளதாகவும், மசகு எண்ணெய்க் குறைவினால் இன்னும் சில நாட்களில் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com