விநியோகத்துக்கு தேவையான எரிபொருளுக்கு தட்டுப்பாடு

இன்றைய தினம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு நிலவுவதாக தாங்கி ஊர்திகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலனறுவை எண்ணெய் முனையத்திற்கு சென்றிருந்த போதிலும் அங்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், சில எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த மக்கள், எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்