வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும்

சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

லாஃப் நிறுவனத்துக்கான எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 3,500 மெட்ரிக் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.

அதன் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது.

இதேவேளை இவ்வாறான பின்னணியில் சந்தையில் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மக்கள் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்