வரலாறு காணாத விலை உயர்வு

பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனுதவி கேட்டு, பாக்., கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமையல் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை வரலாறு காணாத வகையில் அந்நாட்டு அரசு நேற்று முதல் உயர்த்தியது. ஒரு லீட்டர் நெய்யின் விலை 208 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது லீட்டர் 605 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லீட்டர் சமையல் எண்ணெயின் விலை 213 ரூபாய் உயர்த்தப்பட்டு, 555 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நிலைமை இப்படியே போனால், பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்