குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம்.
மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர்- ஒரு கப்
கோதுமை மா – ஒன்றரை கப்
ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு- ஒரு சிட்டிகை
சீனி – ஒரு கப்
பால்- 200 கிராம்
நெய்- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து மாவினை ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கேக்குகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.
அதாவது குலோப்ஜாமூன் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் செய்ய வேண்டும். பாகு பதம் வந்தவுடன். நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பால் கேக்குகள் மீது ஊற்றி புரட்டி எடுத்தால் சுவையான மில்க் கேக் தயார்.