தவறான விவசாய கொள்கை, 72 வருடகால முன்னேற்றத்தை இல்லாதொழித்துள்ளது.

அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கை 72 வருடகால விவசாயத்துறையின் முன்னேற்றத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது. அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காததன் விளைவை தற்போது எதிர்க்கொள்வதுடன், எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கொள்ள நேரிடும்.

உணவு தட்டுப்பாடு சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்களை விரைவாக செயற்படுத்தாவிடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 1 இலட்சத்து 95 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை மாதந்தம் இறக்குமதி செய்ய நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே தெரிவித்துள்ளார்.

உணவு தட்டுப்பாடு தொடர்பில் நிகழ்நிலை முறைமை ஊடாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தவறான விவசாய கொள்கையினால் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை கடந்த வருடம் மே மாதத்தில் இருந்து அரசாங்கத்திடம் குறிப்பிட்டோம்.

அறிவியல் ரீதியிலான காரணிகளுக்கு அரசியல் காரணிகள் மதிப்பளிக்காததன் விளைவை தற்போது எதிர்க்கொள்கிறோம்,எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கொள்ள நேரிடும்.

சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் விவசாயத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்துறையை முன்னேற்ற சிறந்த திட்டங்களை செயற்படுத்தின.

இருப்பினும் 2019ஆம் ஆண்டிற்கு பின்னரான அரசாங்கம் அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காமல் உரம் தொடர்பில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தினால் 72 வருடகால விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக விவசாயத்தின் விளைச்சல் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.எரிபொருள் மற்றும் உரம் தொடர்பிலான பிரச்சினையினால் தற்போதைய சிறுபோகமும் வெற்றிப்பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

சேதன பசளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது,இருப்பினும் சேதன பசளையின் தரம் தொடர்பில் விவசாயிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என்ற அறிவியல் பூர்வமான எதிர்வு கூறலையிட்டு அழுவதா அல்லது எமது எதிர்வு கூறல் வெற்றிப்பெறும் தன்மை காணப்படுகின்றது என கருதி மகிழ்வதா என்பது தெரியவில்லை.

சிறுபோக விவசாய பயிர்ச்செய்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.

உணவு தட்டுப்பாட்டை வெற்றிக்கொள்ள அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான சிறந்த திட்டங்களை விரைவாக செயற்படுத்தாவிடின் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 1இலட்சத்து 95 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை மாதாந்தம் இறக்குமதி செய்ய நேரிடும்.

அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது.72 வருடகால விவசாயத்துறையின் வீழ்ச்சியை ஒரிரு வருடங்களினால் சீர் செய்ய முடியாது.

சிறுபோக விவசாய நடவடிக்கையில் எதிர்பார்க்கும் அளவிற்கு விளைச்சலை இம்முறை பெற முடியாது.பெரும்போக விவசாயத்தை இலக்காகக் கொண்டு சிறந்த திட்டங்களை விரைவாக செயற்படுத்த வேண்டும்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழான நிதியில் 48 மில்லியன் யூரியா உரம் இறக்குமதிக்காக ஒதுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

உலகில் யூரியா உற்பத்தியில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ள போதும் இந்தியா பிற நாடுகளுக்கு யூரியாவை ஏற்றுமதி செய்யாமல்,தனது நாட்டின் விவசாயத்துறை தேவைக்காக யூரியாவை இறக்குமதி செய்கிறது.

விவசாயத்துறைக்கு இந்தியா பல்வேறு வழிமுறைகளில் முன்னுரிமை வழங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.இலங்கைக்கு யூரியா உரத்தை இறக்குமதி செய்ய இந்தியா அவதானம் செலுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்