ஜூலை 6 வரை சமையல் எரிவாயு இல்லை

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் குறைந்தளவேனும் எரிவாயு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் 10 ஆம் திகதியின் பின்னர், 25,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய பாரியதொரு கப்பல் மாலைத்தீவு கடற்பகுதியை அண்மிக்கவுள்ளது.

அங்கிருந்து சிறு கப்பல்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் ஐந்தாம் திகதியின் பின்னர், நாளாந்தம் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்