சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தடைக்கு, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்று முன்தினம் இணங்கியதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123 டொலராக பதிவாகியுள்ளதென சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களில் இது அதிகபட்ச விலை அதிகரிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 27 சதவீத எண்ணெய்யையும், 40 சதவீத எரிவாயுவையும் விநியோகிக்கிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ரஷ்யாவிலிருந்து 90 சதவீத எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசியல் உடன்பாட்டை எட்டியுள்ளனர்,

எனினும், எரிவாயு இறக்குமதியில் இணக்கமின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்